விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்..! - மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்.

By selvarani Updated on :
விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்..! - மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்.Representative Image.

விலைவாசி உயர்வை கட்டுத்தப்படுத்த வேண்டும் என்று மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

விலைவாசி உயர்வு மற்றும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலை உர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவில் இருந்து நீக்க செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா,ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்பான செய்திகள்