விபத்தில் சிக்கி கை, கால்கள் செயலிழப்பு - நவீன சிகிச்சை மூலம் இளைஞருக்கு வாழ்வளித்த அரசு மருத்துவர்கள்!

By selvarani Updated on :
விபத்தில் சிக்கி கை, கால்கள் செயலிழப்பு - நவீன சிகிச்சை மூலம் இளைஞருக்கு வாழ்வளித்த அரசு மருத்துவர்கள்!Representative Image.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாலை விபத்தில் கழுத்து தண்டுவடத்தில் காயம் அடைந்து கை கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்கள் செயல்படாமல் இருந்த இளைஞருக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் விபத்துக்கு முன் இருந்த நிலைக்கு கொண்டு வந்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்னர்.

தூத்துக்குடி சோட்டையின் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன். கூலி தொழிலாளியான இவர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் கழுத்துப் பகுதியில் உள்ள தண்டுவட எலும்பு உடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மைதீன் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டதுடன் அவரது கை கால்கள் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர் ராஜா விக்னேஷ் தலைமையிலான அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து தற்போது விபத்து ஏற்படுவதற்கு கீழ் ஸ்டீல் கம்பிகளுக்கு பதிலாக நவீன முறையிலான டைட்டானியம் கே.ஜே கழுத்துப் பகுதியில் டாஸ் அல்ட்ரா டைட்டானியம் கூண்டை பொருத்தி இம்ப்லான்ட் அறுவை சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை செய்து மேலும் பிசியோதெரபி சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்து விபத்துக்கு முன்பு எவ்வாறு இருந்தாரோ அதே நிலைமைக்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு சில மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே அளிக்கப்படும் இந்த நவீன சிகிச்சை தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவர்கள் செய்து நோயாளியை காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை செய்த அரசு மருத்துவர்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவகுமார் பாராட்டினார்.

தொடர்பான செய்திகள்