குழப்பங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம்..! - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேச்சு

By selvarani Updated on :
குழப்பங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம்..! - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேச்சுRepresentative Image.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களோ, வதந்திகளையோ பொதுமக்கள் நம்ப வேண்டாம், தகுதியான அனைவருக்கும் விண்ணப்பம் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான முகாம்கள் ஜூலை 24 முதல் சென்னை மாவட்டத்தில் தொடங்க உள்ளது.. இதற்கான பயோ மெட்ரிக் கருவிகள் உள்ளிட்ட முகாம்களுக்கு தேவையான பொருட்கள் இன்று முதல் அனைத்து மண்டலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இது தொடர்பான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

சென்னையில் 1,417 நியாய விலை கடைகளும், 17.18 லட்சம் ரேஷன் அட்டை தாரர்களும் உள்ளனர். தற்போது மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வந்துள்ளன. மீதம் உள்ள 7 லட்சம் விண்ணப்பங்கள் விரைவில் வந்துவிடும், அதன் பின்ன விண்ணப்ப விநியோகிக்கப்படும் தேதி அறிவிக்கப்படும். 500 கார்டுகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமித்து, 3 கடைகளுக்கு ஒரு முகாம் என திட்டமிட்டுள்ளோம். அந்தந்த ரேஷன் கடைக்கு என குறிப்பிட்பட்ட முகாமிற்கு மட்டுமே செல்ல வேண்டும்.

டோக்கன் வழங்கப்பட்ட தேதியில் முகாமிற்கு சென்றால் போதும்.வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு திறந்து தர முகாமிலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டல அளவில் கட்டுப்பாட்டு அரை செயல்படுத்த உள்ளோம்., மக்களுக்கு இது ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதில் தொடர்பு கொள்ளலாம். மக்கள் எந்த வதந்தியும் நம்ப வேண்டாம். இந்த திட்டத்தை பொறுத்த வரை முழு வீச்சிலும் அனைத்து அலுவலர்களும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.தேவையற்ற குழப்பங்களும் வதந்திகளை நம்ப வேண்டாம். தகுதியான அனைவருக்கும் விண்ணப்பம் வழங்கப்படும். செப்டம்பர் 15ம் தேதிக்குள் தற்போது நடைபெற்று வரக்கூடிய மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்பான செய்திகள்