ஆர்டர் செய்த தோசையில் கரப்பான் பூச்சி...வைரலாகும் வீடியோ!

By Priyanka Hochumin Updated on :
ஆர்டர் செய்த தோசையில் கரப்பான் பூச்சி...வைரலாகும் வீடியோ!Representative Image.

கோவையில் பிரபல உணவகத்தில் கரப்பான் பூச்சியுடன் காலிஃபிளவர் தோசை பரிமாறியதால் பரபரப்பு.

கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் வெளியே சாப்பிட சென்றுள்ளார். அவர்கள் சாய்பாபா சாலையில் என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள அன்னபூர்னா உணவகத்திற்கு சென்று காலிஃபிளவர் தோசை, பன்னீர் தோசை, இட்லி, பரோட்டா ஆகிய உணவுகளை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்கு பிறகு உணவுகள் கொண்டு வரப்பட்டன. சாப்பிட முற்படும் போது தோசையில் கரப்பான் பூச்சி கிடந்ததைப் பார்த்து அதிற்சியடைந்தார்.

பின்னர் ஹோட்டல் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க, அவர்கள் மிகவும் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதுல என்ன இருக்கு, இருங்க உங்களுக்கு வேற தோசை கொண்டு வர சொல்கிறேன் என்று கூறியுள்ளனர். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான பிரசாந்த் உடனடியாக சமைக்கும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வில்லை. எனவே, பிரசாந்த் உணவு பாதுகாப்பு துறையிடம் இது குறித்து புகார் அளிக்கப்போவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

தொடர்பான செய்திகள்