பின்நோக்கி ஸ்கேட்டிங் செய்து அசத்தல் - உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவர்கள்!

By selvarani Updated on :
பின்நோக்கி ஸ்கேட்டிங் செய்து  அசத்தல் - உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவர்கள்!Representative Image.

சிங்க பெருமாள் கோவில் அருகே தொடர்ந்து மூன்று மணி நேரம் பின்னோக்கி ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த மகேந்திராசிட்டி பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் ராயல் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் ஸ்கேட்டிங் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 4 வயது முதல் 20 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இடைவிடாமல் தொடர்ந்து 3 மணி நேரம் பின் நோக்கி ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்தனர்.

இந்த சாதனையை இந்திய புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற நிறுவனம் மாணவர்கள் சாதனை செய்துள்ளதாக பதிவு செய்தது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் மாணவர்கள் ஐந்து பேர் வரிசையாக நின்று பின்நோக்கி ஸ்கேட்டிங் செய்தனர்.

5நிமிடத்திற்கு ஒரு குழுவினர் என தொடர்ந்து அடுத்தடுத்து 5பேர் தொடர்ந்து பின் நோக்கி சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்தனர். இந்த புதிய உலக சாதனை படைத்த 35 மாணவ, மாணவிகளுக்கும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனர் அஜய்குமார் மாணவர்களை பாராட்டி, பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

தொடர்பான செய்திகள்