மாந்தோப்பில் நாட்டு துப்பாக்கி பதுக்கல் - காவலாளி ரகுபதி கைது.

By selvarani Updated on :
மாந்தோப்பில் நாட்டு துப்பாக்கி பதுக்கல் - காவலாளி ரகுபதி கைது.Representative Image.

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு துப்பாக்கிக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் இதுதொடர்பாக மாந்தோப்பு காவலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலைக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் மாந்தோப்பு கொண்டம்பல்லி கிராமத்தில் உள்ளது. இந்த மாந்தோப்பில் கொத்தப்பல்லி கிராமத்தை சேர்ந்த ரகுபதி என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த மாந்தோப்பில் உள்ள குடிசை வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் இருப்பதாக பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் விரைந்து சென்று சோதனையிட்டனர்.

இதில் இரண்டு நாட்டு துப்பாக்கிக்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். காவலாளி ரகுபதியை கைது செய்த பேரணாம்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைக்கப்பட்டது எதற்காக?, துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டது நிலத்தின் உரிமையாளரா? அல்லது வேறொரு நபரா? என காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்