மழைநீர் கால்வாயில் எரிந்து கிடந்த சடலம்...சாட்சி இல்லாமல் கொலை முயற்சி...ஆனாலும் தடயம் கிடைச்சாச்சு!

By Priyanka Hochumin Updated on :
மழைநீர் கால்வாயில் எரிந்து கிடந்த சடலம்...சாட்சி இல்லாமல் கொலை முயற்சி...ஆனாலும் தடயம் கிடைச்சாச்சு!Representative Image.

மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் கிடந்த சடலம், விசாரணையில் தெரிய வந்த பல திடுக்கிடும் உண்மைகள்.

சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்வதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழைநீர் கால்வாயில், எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மிகவும் மோசமான நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோதனையின் முடிவில் அந்த உடல் ஒரு மூதாட்டியுடையது என்பது தெரிய வந்தது. எனவே, அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர் அது மணலி பகுதியை சேர்ந்த மூதாட்டி வடிவம்மாள் என்பதை கண்டு பிடித்தனர். மேலும் நடக்கவே முடியாத நிலையில் இருக்கும் அந்த மூதாட்டியை யாரோ நான்கு கிலோ மீட்டர் தொலைவில் கொண்டு வந்து எரித்து கொன்றதாக கூறுகின்றனர். அது மட்டும் இன்றி சொத்துக்காக இந்த கொலையை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது என்று காவல் துறையினர் அறிவித்தனர். இன்னும் இந்த கொலை குறித்த முழு விவரமும் வெளியாகவில்லை.

தொடர்பான செய்திகள்