டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் விளம்பர செலவுக்காக ரூ.2,700 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இன்றைய கூட்டத்தின்போது, மாநிலங்களவையில், மத்திய அரசின் விளம்பர செலவு குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சையத் நசீர் எம்.பி., கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு தரப்பில், 'கடந்த 5 ஆண்டுகளில் விளம்பர செலவுக்காக ரூ.2,700 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 2018-19 நிதியாண்டில் ரூ.1,106 கோடி செலவிடப்பட்டுள்ளது' என பதிலளிக்கப்பட்டது.
அதேபோல், பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., சிவதாசன் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, 'கடந்த 2 ஆண்டில் பிரதமரின் 12 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது' என மத்திய அரசு பதிலளித்தது.