சோளிங்கர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதல்: கார் டிரைவர் கவலைக்கிடம்!

By Baskaran. S Updated on :
சோளிங்கர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதல்: கார் டிரைவர் கவலைக்கிடம்!Representative Image.

ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதியதில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை காரில் வந்து கொண்டிருந்தார். சோளிங்கர் அடுத்த பாராஞ்சி கிராமத்திற்கு அருகே உள்ள கருங்கல் சிலுவை மலை அருகே வந்த போது, எதிரே வந்த அரசு விரைவு பேருந்து மீது கட்டுப்பாட்டை மீறி  மோதியது.

அரசு பேருந்து ஓட்டுநர்  சாமர்த்தியமாக பேருந்தை  கவிழ்ழாமல் முட்புதரில் நுழைத்து பத்திரமாக அனைவரையும் காப்பாற்றினார். பொது மக்கள் காரில் இருந்த கஜேந்திரனை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்