காய்கறிகளை வாங்க அதிமுக பெண் தொண்டர்கள் போட்டா போட்டி- கன்னியாகுமரி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு

By selvarani Updated on :
காய்கறிகளை வாங்க அதிமுக பெண் தொண்டர்கள் போட்டா போட்டி- கன்னியாகுமரி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்புRepresentative Image.

கன்னியாகுமரி மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் காட்சிக்காக வைக்கப்பட தக்காளி வாங்குவதற்காக பெண் தொண்டர்கள் முந்தியடித்துகொண்டு சென்றதால் பரபரப்பு நிலவியது.

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி வியர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் அதிமுக கழக அமைப்புச் செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருளின் விலைவாசியை கண்டித்து உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முடிந்து காட்சிக்காக வைக்கப்பட்ட தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை எடுத்துச் செல்வதில் அதிமுக பெண் தொண்டர்கள் இடையே போட்டி ஏற்பட்டது. காய்கறியை வாங்குவதில் ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டு சென்றனர். சில பெண்களுக்கு காய்கறி கிடைக்காத விரக்தியில் அதிமுகவினரை வசைப்பாடி சென்றனர். இதனால் அங்கு வந்திருந்த நிர்வாகிகளிடையே சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்பான செய்திகள்