மக்களுக்கு நன்மை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்..! - மனுநீதி நாள் முகாமில் வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை

By selvarani Updated on :
மக்களுக்கு நன்மை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்..! - மனுநீதி நாள் முகாமில் வேலூர் ஆட்சியர் எச்சரிக்கைRepresentative Image.

வேலூர் மாவட்டம் தெள்ளை கிராமத்தில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் புகார் அளித்தும் பிரச்சனைகளை அதிகாரிகள் சரிசெய்வதில்லை என பெண்கள் புகார் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த ஆட்சியர் மக்களுக்கு நன்மை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் அமிர்தி அருகேயுள்ள தெள்ளை கிராமத்தில் இன்று மனு நீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. .இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் கணியம்பாடி ஒன்றிய துணை தலைவர் கஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் கர்ப்பிணிகளுக்கு பெட்டகங்கள் மற்றும் சித்த மருத்துவம் சார்பில் சஞ்சீவி பெட்டகம் , தையல் எந்திரம் ,இஸ்திரி பெட்டி ஆகியவை வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் மக்களின் குறைகளை தீர்க்கவே இது போன்ற மனு நீதி நாள் முகாம்கள் நடக்கிறது என பேசிகொண்டிருந்தார். அப்போது பெண்கள் எழுந்து குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியில்லை.. புகார் கூறியும் அதிகாரிகள் சரி செய்யவதில்லை என தெரிவித்தனர்.. இதனால் கோபமடைந்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கிராமப்புறங்களில் மக்களுக்கு நன்மை செய்யவும் திட்டங்களை கொண்டு சேர்க்கவும் அதிகாரிகள் தான் அந்த பணியை செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் சரியாக வேலை செய்வது கிடையாது. இனியும் இது போன்று புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரித்தார்.

தொடர்பான செய்திகள்