லாரி ஓட்டுநர்களை தாக்கி செம்மரக்கட்டை கடத்தும் கும்பல் கைது - தமிழகத்தை சேர்ந்த 5 பேரிடம் விசாரணை!

By selvarani Updated on :
லாரி ஓட்டுநர்களை தாக்கி செம்மரக்கட்டை கடத்தும் கும்பல் கைது - தமிழகத்தை சேர்ந்த 5 பேரிடம் விசாரணை!Representative Image.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வாகன ஓட்டுநர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலை உயர்ந்த செம்மரக்கட்டைகள் காணப்படுகின்றன. இவற்றை கடத்தல் கும்பல்கள் வெட்டி பல இடங்களுக்கு கடத்திச் செல்கின்றனர். அவ்வாறு கடத்திச் செல்லப்படும் செம்மரக்கட்டைகளை ஆந்திரா மற்றும் தமிழக வனத்துறை மற்றும் போலீசார் மடக்கி செம்மர கடைகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் லாரிகளில் கடத்தி வரப்படும் செம்மரக்கட்டைகளை பல நபர்கள் ஒன்று சேர்ந்து லாரியை மடக்கி ஓட்டுநரை கத்தியால் வெட்டி தாக்கி விட்டு லாரியில் உள்ள செம்மரக்கட்டைகளை கடத்திச் செல்ல இருப்பதாக வேலூர் மாவட்டம் காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி பகுதியில் சந்தேகத்துக்கிடமான நபர்களை மடக்கி விசாரித்தனர்.

அதில், காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் சேர்ந்த ராஜா என்கிற வசூல்ராஜா, வேலூர் தோட்டப்பாளையம் பகுதி சேர்ந்த சதீஷ்குமார், காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் சேர்ந்த சையத் மான்சூர் காஞ்சிபுரம் அசோக் நகர் பகுதியில் சேர்ந்த மோகன் குமார் என்கிற வெள்ளை மோகன், காட்பாடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கவுஸ் பாஷா, என தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், செம்மரக்கட்டைகளை கடத்தி வரும் வாகன ஓட்டுனர்களை மடக்கி அவர்களை தாக்கி வெட்டிவிட்டு செம்மர கடத்தலில் ஈடுபட இருந்ததாக தெரியவந்துள்ளது.

அதன் காரணமாக விருகம்பட்டு போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார் துரிதமாக செயல்பட்டு , வாகன ஓட்டுநர்களை தாக்கி விட்டு செம்மரக்கட்டைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்பான செய்திகள்