சென்னையில் 18ஆம் தேதி இந்த 7 இடங்களில் மெட்ரோ வாட்டர் வராது..

By Nandhinipriya Ganeshan Updated on :
சென்னையில் 18ஆம் தேதி இந்த 7 இடங்களில் மெட்ரோ வாட்டர் வராது.. Representative Image.

சென்னை குடிநீர் வாரியம் மூலம் ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதற்காக நீர்த் தேக்க தொட்டியின் 700 மி.மீ அளவு கொண்ட உந்து குழாயுடன் 1500மி.மீ. அளவு கொண்ட பிரதான குழாயை இணைக்கும் பணிகள் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் மேற்கொள்ளப்படுகின்றன.  

இதனால் மார்ச் 18-ஆம் தேதி காலை முதல் மார்ச் 19-ஆம் தேதி காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுக்குவேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் எந்த வித தடையும் இன்றி சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.  

தொடர்பான செய்திகள்