இலங்கைக்கு கடத்த தயராக இருந்த 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் - ஒருவர் கைது, படகு உரிமையாளரை தேடும் காவல்துறை.

By selvarani Updated on :
இலங்கைக்கு கடத்த தயராக இருந்த 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் - ஒருவர் கைது, படகு உரிமையாளரை தேடும் காவல்துறை.Representative Image.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்து, ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு பெட்ரோல் கடத்தப்படுவதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் அந்தப்பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, கடற்கரையில் தயார் நிலையில் இருந்த ஒரு பைபர் படகை சோதனை செய்த போது தலா 50 லிட்டர் வீதம் 9 கேன்களில் 450 லிட்டர் பெட்ரோல் மற்றும் இன்ஜின் ஆயிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூபாய் 5 லட்சம் என கூறப்படுகிறது. படகில் இருந்த அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். படகின் உரிமையாளரான இனிகோ நகரை சேர்ந்த போஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பெட்ரோல் எங்கு கடத்தி செல்லப்படுகிறது, கொண்டுவரச் சொன்னவர் யார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என தனிப்படை காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தொடர்பான செய்திகள்