ரூ.35 லட்சம் மதிப்பிலான 162 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

By selvarani Updated on :
ரூ.35 லட்சம் மதிப்பிலான 162 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்புRepresentative Image.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாட்ஸ் அப் புகார் மூலம் வழக்கு பதிவு செய்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள 162 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்து சாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கடந்த மூன்றாம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் செல் போன் தொலைந்தால் புகார் தெரிவிக்கலாம் என வாட்ஸ் ஆப் எண்ணை வெளியிட்டனர்.

இதன் மூலம் 981 புகார் வந்தது. அதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 371 புகார்களுக்கு வழக்குபதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை செய்து 162 செல்போன்களை கண்டுபிடித்து இன்று வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 162 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்பான செய்திகள்