பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது வெளியான முக்கிய அறிவிப்பு!

By Priyanka Hochumin Updated on :
பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது வெளியான முக்கிய அறிவிப்பு!Representative Image.

12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்ததாகவும், திட்டமிட்ட படி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி மொத்தம் 79 மையங்களில், 30,000 ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. அதன் படி, கடந்த வார இறுதியில் விடைத்தாள் திருத்தும் முழுவதுமாக முடிவடைந்தது. தற்போது மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதுவும் கூடிய விரைவில் முடிந்து விடும்.

ஆகையால் முன்னதாக அறிவித்த படி வரும் 8 ஆம் தேதி காலை பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை முடிவடைகிறதால், இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது.

தொடர்பான செய்திகள்