ஆட்டோ மீது கார் மோதி விபத்து - நூழிலையில் காயங்களுடன் உயிர்தப்பிய 11 பள்ளி மாணவர்கள்!

By selvarani Updated on :
ஆட்டோ மீது கார் மோதி விபத்து - நூழிலையில் காயங்களுடன் உயிர்தப்பிய 11 பள்ளி மாணவர்கள்!Representative Image.

மதுராந்தகம் அருகே மேலவளம்பேட்டை என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 11 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தமங்கலம் கிராமத்தில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். சித்தமங்கலம் கிராமத்தில் இருந்து ஆட்டோ மூலமாக மாணவ, மாணவிகளை பெற்றோர் அந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நிலையில் வழக்கம் போல சித்தாமங்கலம் கிராமத்திலிருந்து கருங்குழி நோக்கி ஆட்டோவில் 11 மாணவர்கள், ஒரு ஆசிரியர் உட்பட 12 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது மதுராந்தகம் அடுத்த மேடவளம் பேட்டையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது , சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் 11 பள்ளி மாணவர்கள் ஒரு ஆசிரியர் , மற்றும் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர். காயங்களுடன் உயிர்தப்பிய அனைவரும் மதுராந்தகம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்