பைக்கில் வைத்திருந்த 1.30 லட்சம் பணம் மாயம்- திருடும் சிசிடிவி காட்சி வைரல்

By selvarani Updated on :
பைக்கில் வைத்திருந்த 1.30 லட்சம் பணம் மாயம்- திருடும் சிசிடிவி காட்சி வைரல்Representative Image.

திருப்பரங்குன்றம் அருகே பைக்கில் வைத்திருந்த 1.30 ஆயிரம் பணத்தை நபர் ஒருவர் எடுத்துச்சென்ற சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது. இதைவைத்து, பணத்தை எடுத்துச் சென்றவர் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சொக்கநாதன்பட்டியை சேர்ந்தவர் பவுன்ராஜ், இவர் நேற்று திருப்பரங்குன்றம் கூட்டுறவு வங்கியில் இருந்து 1.30 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிகொண்டிருந்தார். திருநகர் சீதாலட்சுமி மில்கேட் எதிரே உள்ள ஜூஸ் கடையில் ஜூஸ் குடிப்பதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு ஜூஸ் குடித்துக்கொண்டிருந்தார்.

பின்னர் வந்து பார்த்தப்போது, வாகனத்தில் இருந்த பணம் காணாமல் போனதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, திருநகர் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை எடுத்துச்சென்றது பதிவாகியிருந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை எடுத்துச்சென்றவர் யார்? வங்கியில் இருந்தே பின்தொடர்ந்து வந்தாரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்