
பஞ்சாப் மாநிலத்தில் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மார்ச் 18 [இரவு 12] முதல் மார்ச் 19 [இரவு 12] வரை இணைய சேவைகள் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் காலிஸ்தான் அனுதாபிகள் என்று கருதப்படும் சிங்கின் கூட்டாளிகளுள் ஒருவரை கைது செய்ததால் கலவரத்தை ஏற்படுத்தினர். அதற்கு பின்னர் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீசார் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் சனிக்கிழமை அன்று பஞ்சாப் போலீசார் நடத்திய மிகப்பெரிய சோதனையில் இருந்து 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவர் அமிர்தபால் சிங் தப்பிவிட்டார்.
இதனால் பஞ்சாப் மாநிலத்தில், பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை இணைய சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ஏதேனும் அவசர சேவைக்காக அழைப்புகளை மேற்கொள்ளும் வசதிகளும் மட்டுமே வழங்கப்படும் எனவும் பஞ்சாப்பின் உள்துறை மற்றும் விவகாரங்கள் துறையில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.