
மத்திய பிரதேஷ் மாநிலத்தில் பள்ளத்தில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் கெர்கேடி பத்தர் மாவட்டம் லேட்டரி தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த லோகேஷ் அஹிர்வார் என்னும் 7 வயது சிறுவன் நேற்று இரவு 11 மணியளவில் 60 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் அந்த சிறுவனை வெளியே எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பள்ளத்தில் இருக்கும் சிறுவனுக்கு டியூப் வழியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மேலும் சிறுவனின் நிலையை சிறிய கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.
அந்த 7 வயது சிறுவனை காப்பாற்ற பள்ளத்திற்கு அருகில் ஜேசிபி மூலம் குழி வெட்டி 24 மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் மீட்டெடுத்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதவரை பல குழந்தைகள் இந்த மாறி பள்ளத்தில் விழுந்தாலும் விரைவாக அவர்களை காப்பற்ற எந்த வழியும் இன்னும் இந்தியாவில் கண்டு பிடிக்க வில்லை என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.