இனி இது பெண்களுக்கு இலவசம்.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

By Gowthami Subramani Updated on :
இனி இது பெண்களுக்கு இலவசம்.. அரசின் அதிரடி அறிவிப்பு..!Representative Image.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெண்களுக்கு இலவச பேருந்து வசதி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இனி இது பெண்களுக்கு இலவசம்.. அரசின் அதிரடி அறிவிப்பு..!Representative Image

புதுச்சேரியில், ஏற்கனவே அரசு பேருந்துகளில் ஆதி திராவிட பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை அனைத்து மகளிருக்கும் நீட்டிக்க வேண்டும் என பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்ட உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்கு, புதுச்சேரி மாநில முதல்வரான ரங்கசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதைத் தொடர்ந்து, பதிலளித்தார். அதன் படி, அனைத்து மகளிரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்பான செய்திகள்