கனடாவில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றம்..! வெளியான அதிர்ச்சித் தகவல்...

By Gowthami Subramani Updated on :
கனடாவில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றம்..! வெளியான அதிர்ச்சித் தகவல்...Representative Image.

கனடாவில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படுவதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக மாணவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று படிப்பது கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வட அமெரிக்க நாடான கனடாவுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

இந்நிலையில், போலி ஆவணங்களை சமர்ப்பித்ததற்காக, 700 இந்திய மாணவர்களை கனடா நாட்டு அரசு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றம்..! வெளியான அதிர்ச்சித் தகவல்...Representative Image

கடந்த 2018 ஆம் ஆண்டில், 700 மாணவர்கள் உயர் கல்விக்காக கனடாவிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் படிப்பு முடிந்த பின், PR எனப்படக் கூடிய நிரந்தர குடியிருப்பு கேட்டு அந்த நாட்டின் குடியேற்ற துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்களை சோதித்து பார்த்த போது அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, CBSA அதிகாரிகள், போலியாக ஆவணங்களைச் சமர்ப்பித்த இந்த  700 இந்திய மாணவர்களையும் இந்தியா திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளனர். கனடாவில், பெருமளவில் இது போன்ற மோசடி சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்பான செய்திகள்