
பூத கோலா நடனம் ஆடி கொண்டிருந்த கலைஞர் ஒருவர் ஆடிக் கொண்டிருந்த போதே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் புகழ்பெற்ற பாரம்பரிய கலை “பூத கோலா” ஆகும். இதனை அம்மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளில் உள்ள கிராமத்தில் பூத ஆராதனா செய்வர். இந்த கலைஞர்கள் தெய்வ நார்தகஸ் என அழைக்கப்படுவர். இந்த நடனத்தின் போது, கந்து அஜிலா என்ற கலைஞர் ஆடிக்கொண்டிருந்த போதே திடீரென மயக்கம் அடைந்தார்.
அவரைப் பரிசோதித்துப் பார்த்த போது உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆடிக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.