
நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில், ஒரே நாளில் 2000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மார்ச் மாதத் தொடக்கத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஆக இருந்தது. ஆனால், மார்ச் 28 ஆம் தேதி 3,000 ஆக உயர்ந்துள்ளது.
அதன் படி, கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் ஆனது 30 நாள்களில் 10 மடங்கு அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.