ட்ரிபிள் ரைடிங் இவங்களுக்கு மட்டும் விதிவிலக்கு தர வேண்டும்!

By Priyanka Hochumin Updated on :
ட்ரிபிள் ரைடிங் இவங்களுக்கு மட்டும் விதிவிலக்கு தர வேண்டும்!Representative Image.

கேரளாவில் ட்ரிபிள் ரைடிங்கில் இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு தர வேண்டும் என்று எழுந்த கோரிக்கைக்கு பதில் அளித்துள்ளார் கேரள போக்கு வரத்து துறை அமைச்சர் அந்தோனிராஜு.

கேரளாவின் முக்கிய சாலைகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் நலன் கருதி இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்லும் ‘ட்ரிபிள் ரைடிங்’ குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் அரசின் மதித்த மக்கள் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு கேரள போக்கு வரத்து துறை அமைச்சர் அந்தோனிராஜு செய்திகுறிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில் "இந்த விவகாரத்தில் விதிகளில் திருத்தம் கொண்டு வருவது  குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய அரசிடம் எடுத்துரைக்கவும், பரிந்துரை செய்யவும்  அதிகாரிகளின் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும், புதிய போக்கு வரத்து நடைமுறையின் கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட பிறகு நோட்டீஸ்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும்" தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்திகள்