மகளிருக்கு மாதம் ரூ.1,000 ரூபாய் திட்டம் தொடங்கப்படும்.. மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு!!

By Editorial Desk Updated on :
மகளிருக்கு மாதம் ரூ.1,000 ரூபாய் திட்டம் தொடங்கப்படும்.. மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு!!Representative Image.

மாநிலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை தனது அரசு தொடங்க உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

ஐந்தாண்டுகளில் இந்தத் திட்டத்திற்காக ரூ.60,000 கோடி செலவிடப்படும் என்று நர்மதாபுரம் நகரில் நர்மதா நதிக்கரையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சவுகான் இதை கூறினார்.

ஏற்கனவே மற்ற நலத் திட்டங்களின் பலன்களைப் பெற்றிருந்தாலும், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த ஏழைப் பெண்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம் என அவர் மேலும் கூறினார்.

உஜ்ஜயினியின் மஹாகாலேஷ்வர் கோவிலில் மகாகல் லோக் பாதையில் நர்மதா வழித்தடம் மற்றும் நர்மதா லோக் அமைக்கும் திட்டத்தையும் அப்போது முதல்வர் சவுகான் அறிவித்தார்.

முன்னதாக, நர்மதா ஜெயந்தியை முன்னிட்டு நர்மதா நதிக்கரையில் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா சிங் நேற்று பிரார்த்தனை செய்தனர்.

தொடர்பான செய்திகள்