வாயு கசிவால் 11 பேர் துடிதுடித்துப் பலியான சம்பவம்.. ஊதா நிறத்தில் மாறிய உடல்கள்..!

By Gowthami Subramani Updated on :
வாயு கசிவால் 11 பேர் துடிதுடித்துப் பலியான சம்பவம்.. ஊதா நிறத்தில் மாறிய உடல்கள்..!Representative Image.

தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவின் காரனமாக, 11 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் பால் பொருள்களை உற்பத்தி செய்யக் கூடிய தொழிற்சாலையான கோயல் மில்க் பிளாண்ட் மற்றும் குளிரூட்டும் அமைப்பு போன்றவை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் விஷத்தன்மை கொண்ட வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தொழிற்சாலை அருகே வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் மயங்கி விழும் நிலை ஏற்பட்டது. இதில் அவர்களின் உடல் முழுவதும் ஊதா நிறத்தில் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், வாயு கசிவு காரணமாக தொழிற்சாலை இருக்கும் இடத்தில் யாரும் நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் அங்கு நிலவு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி பெரும் பதற்றத்துடன் காணப்படுகிறது.

தொடர்பான செய்திகள்