அதானி விவகாரத்தால் கடும் அமளி.. முடங்கியது மக்களவை!!

By Editorial Desk Updated on :
அதானி விவகாரத்தால் கடும் அமளி.. முடங்கியது மக்களவை!!Representative Image.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பியதால், அவையில் கடும் அமளி நிலவியதால் மக்களவை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஜாம்பியாவில் இருந்து வந்த நாடாளுமன்றக் குழுவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்று, கேள்வி நேரத்தைத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி முழக்கங்களை எழுப்பினர்.

அவையில் கூச்சல் குழப்பம் தொடர்ந்து நிலவிய நிலையில் சபாநாயகர் ஆட்சேபம் தெரிவித்ததுடன், ஆதாரமற்ற கூற்றுக்களை கூற வேண்டாம் என உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். 

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கேள்வி நேரம் ஒரு முக்கிய அங்கம் என்றும், அதை சீர்குலைக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

எனினும் தொடர்ந்து முழக்கம் நீடித்ததால், அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

தொடர்பான செய்திகள்