பெண் காவல் துறையினரை அறைந்த அரசியல் தலைவர் வைரல் வீடியோ

By Priyanka Hochumin Updated on :
பெண் காவல் துறையினரை அறைந்த அரசியல் தலைவர் வைரல் வீடியோRepresentative Image.

தெலுங்கானா மாநிலத்தின் முக்கிய அங்கமான ஒய்.எஸ்.ஷர்மிளா பெண் காவல் துறையினரை அறையும் காட்சி வைரலாக பரவி வருகிறது.

இன்று ஹைதெராபாத்தில் தாமரை குளம் பகுதியில் இருக்கும் YSRTP தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் மிகவும் கோபமடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்தார். அப்போது அவரைத் தடுக்க வந்த பெண் காவல் துறையினரை கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்பு பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் ஒய்.எஸ்.ஷர்மிளாவை ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது ஷர்மிளாவைப் பார்க்க ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு வந்த ஒய்.எஸ்.விஜயம்மா, பணியில் இருந்த மற்றொரு போலீஸ் கான்ஸ்டபிளை அறைந்தார். தங்களின் கடமைகளை செய்துக் கொண்டிருக்கும் காவல் துறையினரை அறைந்த ஷர்மிளா மற்றும் விஜயம்மாவை பொது மக்கள் பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்