மனைவியை துண்டாக வெட்டி...உடலை எரித்த கொடூரம்...கணவன் கைது!

By Priyanka Hochumin Updated on :
மனைவியை துண்டாக வெட்டி...உடலை எரித்த கொடூரம்...கணவன் கைது!Representative Image.

அரியானா மாநிலம் மானேசர் மாவட்டத்தில் பெண்ணின் உடல் துண்டிக்கப்பட்டு எறிந்த நிலையில் கிடந்ததால் பரபரப்பு.

அரியானா மாநிலம் மானேசர் மாவட்டம் குக்டோலா கிராமத்தில் உமைத் சிங் என்பவர் பண்ணை ஒன்றை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நாள் அவரின் பண்ணையில் புகை மூட்டமாக இருப்பதை பார்த்து விட்டு ஒருவர் சிங்கிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் உமைத் சிங் காவல் துறையினருக்கு தகவல் சொல்லி அவர்களுடன் பண்ணைக்கு வந்தார். அப்போது அங்கு தலை மற்றும் கை இல்லாமல் எறிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது.

அது யாரின் உடல் என்று தெரியாத அளவிற்கு சடலம் எறிந்திருந்தது. மேலும் மற்ற பாகங்கள் சுற்றுப் பகுதியில் இருக்கிறதா என்றும் தேடிப் பார்த்தனர். ஆனால் அது எதுவும் கிடைக்க வில்லை. எனவே, கிடைத்த உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயம் ஏதாவது கிடைக்குமா என்று தடயவியல் குழுவினர் முயற்சி செய்தனர். கடந்த 23 ஆம் தேதி மானேசர் பகுதியில் துண்டிக்கப்பட்ட இரண்டு கைகளை கண்டெடுத்தனர். அதுவரை கிடைத்ததை வைத்து விசாரித்ததில் அது ஒரு பெண்ணின் சடலம் என்பதை கண்டு பிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கெர்கிடோலா பகுதியில் பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டது. இப்போது முழுமையாக விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளி அந்த பெண்ணின் கணவர் ஜிதேந்திரா என்பது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் எதற்காக இப்படி கொடூரமாக மனைவியை கொலை செய்துள்ளார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்பான செய்திகள்