இந்தியாவின் பசுமை ஆட்டோ...வைரல் வீடியோ ட்ரெண்டிங்கில்!

By Priyanka Hochumin Updated on :
இந்தியாவின் பசுமை ஆட்டோ...வைரல் வீடியோ ட்ரெண்டிங்கில்!Representative Image.

திருப்பதியில் ஆட்டோ ஓட்டுநர் பாபு என்பவர் முதலில் தன்னுடைய ஆட்டோவில் ஓரிரு செடிகளை வைத்து பராமரித்து வந்துள்ளார். அந்த செயல் பயணிகளை ஈர்த்தது மற்றும் அவர்கள் அதனை பாராட்டினார். இதனால் மிகவும் ஊக்கமடைந்த பாபு தனது ஆட்டோ முழுவதையும் செடி கொடிகளால் அலங்கரித்தார். இந்த கோடை காலத்தில் மக்கள் ஆட்டோவில் செல்ல தயமடையும் நேரத்தில் பாபுவின் ஆட்டோ மட்டும் நிற்காமல் சுழன்றுக்கொண்டே இருக்கிறது. இதனை பார்த்து ரசித்த பயணி ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு, மக்களால் பேசப்பட்டு வருகிறது. இது மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பபப்படுகிறது.

தொடர்பான செய்திகள்