பட்டப்பகலில் இளைஞரை கல்லால் அடித்து கொன்ற பயங்கரம்.. அதிர்ச்சி பின்னணி..

By Nandhinipriya Ganeshan Updated on :
பட்டப்பகலில் இளைஞரை கல்லால் அடித்து கொன்ற பயங்கரம்.. அதிர்ச்சி பின்னணி..Representative Image.

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் இந்தரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தம்பதி கனகய்யா - பத்மா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், மூத்த மகளும் அதே ஊரைச் சேர்ந்த மகேஷ் (24 வயது) என்ற இளைஞரும் காதலித்துள்ளனர். இவர்கள் காதலிப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்துள்ளர் மகேஷ். 

பின்னர், திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது. அப்படி இருந்தபோதிலும் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோவையும் காட்டி மகேஷ் தன்னை தொடர்ந்து காதலிக்கும்படி அந்த பெண்ணை விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

தொல்லை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்த பெண்ணின் கணவருக்கு பகிந்துள்ளார். அதைப்பார்த்து மனவேதனை அடைந்த கணவர் 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இவ்வளவு நடந்தும் மகேஷ் அந்த பெண்ணை விடாமல் டார்ச்சர் செய்து வந்துள்ளார். ஒருக்கட்டத்தில் அந்த பெண் காவல்நிலையத்திலும் புகாரளிக்க அதுவும் பயனில்லாமல் போனது.

இந்த நிலையில், நேற்று மகேஷ் இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணின் குடும்பத்தினர், அவரை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்த கல்லைதூக்கி தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, உடனே விரைந்து வந்த போலீசார் மகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். 

பட்டப்பகலில் தலையில் கல்லைத்தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பந்தமாக அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்பான செய்திகள்