ஒரே நாளில் இத்தன பேருக்கு கொரோனாவா? உச்சம் தொட்ட பாதிப்பு.. பீதியில் மக்கள்..

By Nandhinipriya Ganeshan Updated on :
ஒரே நாளில் இத்தன பேருக்கு கொரோனாவா? உச்சம் தொட்ட பாதிப்பு.. பீதியில் மக்கள்..Representative Image.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் நேற்று மட்டும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது, நேற்று ஒரே நாளில் 2,151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3016 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை:

கேரளா - 686

மகாராஷ்டிரா - 483

இமாச்சலபிரதேசம் - 255

குஜராத் - 401

டெல்லி - 300

கர்நாடகா - 215

அரியானா - 120 

தமிழ்நாடு - 112

தொடர்பான செய்திகள்