மாவோயிஸ்ட் தாக்குதல்...11 போலீஸ் உடல் சிதறி பலி...சத்தீஸ்கர் வெடி குண்டு தாக்குதல்

By Priyanka Hochumin Updated on :
மாவோயிஸ்ட் தாக்குதல்...11 போலீஸ் உடல் சிதறி பலி...சத்தீஸ்கர் வெடி குண்டு தாக்குதல்Representative Image.

கடந்த சில நொடிகளுக்கு முன்னர் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 11 போலீஸார் உயிரிழந்த செய்தி நாட்டையே அதிர வைத்தது.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் அரன்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை நம்பி 10 போலீசார் வேனில் இன்று மதியம் 3 மணிக்கு அப்பகுதியை சோதனை செய்ய கிளம்பினர். சரியாக போலீஸ் அதிகாரிகள் சென்ற வேன் அரன்பூருக்குள் நுழைந்த அடுத்த நொடி, சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதனால் அந்த வேன் பல அடி தூரம் மேலே பறந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதனால் வேனில் சென்ற 10 போலீசார் மற்றும் 1 பஸ் டிரைவர் சேர்த்து மொத்தம் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். வேனில் சென்ற அனைவரும் ஆயுதப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவல் அறிந்து உடனே, ஏராளமான போலீசார் மற்றும் சிஆர்பிஎப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர். அதில் ஐஇடி வகை வெடிகுண்டை மாவோயிஸ்ட்-கள் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்தது. இந்த கொடூர சம்பவத்தை தெரிந்துக் கொண்ட சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹெல் இதற்கு காரணமான மாவோயிஸ்ட்களுக்கு தக்க பதிலடி தருவதாக உறுதி அளித்தார். மேலும் அந்த பயங்கர வாதிகளை பிடிக்கும் பணியில் ஏராளமான போலீசார் மற்றும் சிஆர்பிஎப் படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்த நக்சலைட்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளனர்.

தொடர்பான செய்திகள்