பெண்ணை தூக்கி வீசிய பவுன்ஸர்.. அதிர்ச்சி சம்பவம்..

By Nandhinipriya Ganeshan Updated on :
பெண்ணை தூக்கி வீசிய பவுன்ஸர்.. அதிர்ச்சி சம்பவம்..Representative Image.

கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்  உள்ள இரவு விடுதி ஒன்றின் வெளியே பெண்கள் சிலர் கடுமையாக சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இரவு நேரத்தில் விடுதி ஒன்றின் வெளியே பெண்கள் அரைகுறை ஆடையுடன் குடுமிப்பிடி சண்டையிட்டுக் கொண்டிருக்க, அங்கே வந்த பாதுகாப்பு அதிகாரி ஒரு பெண்ணை தூக்கி தரையில் பலமாக கீழே போட்டார்.

அதில் அப்பெண் நிலைகுலைந்து போனார். இன்னொரு பெண்ணின் கண்ணில் பெப்பர் ஸ்பிரே அடிக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில், எதற்காக இந்த சண்டை நடந்து குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது. 

தொடர்பான செய்திகள்