பாகிஸ்தான் அரசாங்கம், புண்படுத்தும் அல்லது அவதூறான விஷயங்களை நீக்க மறுத்ததற்காக விக்கிப்பீடியாவைத் தடைசெய்தது.
சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் விக்கிப்பீடியாவின் சேவைகளை 48 மணிநேரத்திற்கு தற்காலிகமாக தடை செய்ததோடு, மத நிந்தனை என்று கருதப்படும் உள்ளடக்கத்தை தொடர்ந்து வழங்கினால், இணையதளத்தை முடக்குவதாக எச்சரித்திருந்தது.
இந்நிலையில், விக்கிபீடியா குறிப்பிட்ட பதிவுகளை நீக்க மறுத்ததால், பாகிஸ்தான் அரசு விக்கிப்பீடியாவை முழுமையாக தடை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட சட்டவிரோத உள்ளடக்கம் தடுக்கப்பட்டால் அல்லது அகற்றப்பட்டால் விக்கிப்பீடியாவின் சேவைகளை மீட்டெடுப்பது மறுபரிசீலனை செய்யப்படும் என்று பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவை கடந்த காலங்களில் அவதூறான உள்ளடக்கங்களை வெளியிட்டன எனக் கருதப்பட்டதால் தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.