இந்திய-அமெரிக்க குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிக்கி ஹேலி பிப்ரவரி 15 அன்று, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் பங்கேற்பது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும்.
பிப்ரவரி 15 அன்று சிறப்பு அறிவிப்பு வெளியிட உள்ளதாக பலருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது மற்றும் பல்வேறு சமூக ஊடக கணக்குகளிலும் இது குறித்து வெளியிடப்பட்டது.
அந்த அழைப்பிதழில், "சிறப்பு அறிவிப்புக்காக நிக்கி ஹேலியுடன் சேரவும்" என்று கூறப்பட்டுள்ளது. 51 வயதான ஹேலி, தென் கரோலினாவின் இரண்டு முறை ஆளுநராகவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதராகவும்இருந்துள்ளார்.
அவர் அதிபர் தேர்தல் போட்டியில் நுழைந்தால், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான போட்டியில் சேரும் முதல் போட்டியாளராக ஹேலி இருப்பார்.
இதற்கிடையே, தற்போது அதிபராக இருக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பிடென் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அந்த கட்சி சார்பில் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.
காலம் கூடி வந்தால், அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரெதிர் துருவங்களில் இரு இந்திய வம்சாவளி பெண்கள் போட்டியிடும் சூழல் ஏற்படவும் வாய்ப்புண்டு. பொறுத்திருந்து பார்க்கலாம்.