
ஈரானில் 5000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு நிலவி வருகிறது.
ஈரானில் மொத்தம் 30 மாகாணங்களில் பள்ளிகள் நடத்தப்படுகிறது. அதில் 21 மாகாணங்களில் படிக்கும் மாணவிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் மாணவிகள் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களை பரிசோதனை செய்யும் போது அவர்களுக்கு விஷம் அளிக்கப்பட்டது தெரியவந்தது.
இது மாணவிகளை பள்ளிகளுக்கு செல்லாமல் தடுப்பதற்காக நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளார். இதனைப் பற்றி தீவிரமாக விசாரிக்கையில் கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை 5000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஈரானின் தலைமை நிர்வாகி அயதுல்லா அலி கொமேனி கூறுகையில், பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.