பயங்கர தீ விபத்து 12 பேர் பரிதாப பலி.. திருட்டின் போது நடந்த பயங்கரம்..

By Nandhinipriya Ganeshan Updated on :
பயங்கர தீ விபத்து 12 பேர் பரிதாப பலி.. திருட்டின் போது நடந்த பயங்கரம்.. Representative Image.

கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருடி அதை வெளிச்சந்தையில் விற்கும் சம்பவங்கள் நைஜீரியா நாட்டில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், நைஜர் டெல்டா மகாணம் மைஹா நகர் வழியாக செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் மர்மநபர்கள் சட்ட விரோதமாக கச்சா எண்ணெயை திருட முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த திடீர் விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்