
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப், ஆபாச நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியது. இதற்கு, டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப், ஆபாச நடிகையுடன் கொண்ட தொடர்பை மறைப்பதற்கு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஒரு டஜன் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆபாசப்பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸூக்கு பணம் கொடுத்தது தொடர்பாக, 30-க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் மீது முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பாக ட்ரம்ப் விசாரணைக்கு நேரில் வரவழைக்கப்பட்டு குற்றச்சாட்டுகளை நினைவூட்டியுள்ளார். ஆனால், ட்ரம்ப் தன் மீதான 34 குற்றச்சாட்டுகளுக்கும் ட்ரம்ப் மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.