அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள கேம்ப் பெல் பே என்ற பகுதியில் நண்பகல் 1.15 மணியளவில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அதே நாள் மதியம் 2.59 மணியளவில் நிக்கோபார் தீவு அருகே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.1 ஆக பதிவானது.
மாலை 4.01 மணியளவில் 3 ஆவது முறையும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 .3 ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அதேபகுதியில் மீண்டும் 4வது முறையாக கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
இருப்பினும், தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.