யாழ் - அனலைதீவு : கனடா தம்பதிகளை வாள்களால் தாக்கிய மர்ம கும்பல் கொள்ளையடிக்க அல்ல முக்கியமான ஆவணத்திற்காக, இன்னும் பல முக்கிய தகவல்களைத் தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கனடாவிலிருந்து தம்பதிகள் இருவர் அனலைதீவில் தங்களின் சொந்த வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களுக்கு உதவியாக ஒருவரும் அங்கு தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அன்று இரவு நேரத்தில் திடீரென முக மூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து அந்த தம்பதிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து 3 ஆயிரம் அமெரிக்க டொலர், கடவுச்சீட்டுக்கள், உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர்.
காயமடைந்த தம்பதிகள் அயலவர்களின் உதவியுடன் படகு மூலம் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பின்னர் மேற் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஊர்காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்ட பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த மர்ம கும்பல் கொள்ளையடிக்க வரவில்லை, வேறேதும் முக்கிய ஆவணங்களுக்காக வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைப் பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் இன்னும் சரியாக கூறப்படவில்லை.