ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு.. 4 வீரர்கள் பலி.. பின்னணியில் சக வீரர்..?

By Nandhinipriya Ganeshan Updated on :
ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு.. 4 வீரர்கள் பலி.. பின்னணியில் சக வீரர்..?Representative Image.

பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் உள்ள ராணுவ நிலையத்தில் அதிகாலை 4.35 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலத்த பாதுகாப்பு நிறைந்த ராணுவ முகாமிற்குள் நடந்த இந்த திடீர் தாக்குதலால் குறிப்பிட்ட பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என தெரியவந்திருக்கிறது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்களூம், துப்பாக்கி ஒன்றும் காணாமல் போனதாக கூறிய பஞ்சாப் காவல்துறையினர் இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் ராணுவ வீரர்கள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில், பதிண்டா ராணுவ முகாமில் சக ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் மற்றொரு ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்பான செய்திகள்