
சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியான நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வெளியேற தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள கெர்ம்டெக் தீவுகளில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பானது நியூசிலாந்தை சுற்றியுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது பொமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தேசிய அவசரநிலை மேலாண்மை நியூசிலாந்திற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை எனக் கூறியுள்ளது. அதே சமயம், அதிக அளவு ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வெளியேற தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.