ஓடும் மெட்ரோ ரயிலில் ஆடைகளைக் கழற்றி குளியல் போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோ ரயில் ஒன்றில் ஒருவர் ஆடைகளை அவிழ்த்து குளியல் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி மெட்ரோ ரயிலில் ஆடல், பாடல், காதல், சண்டை என பல்வேறு ரீல்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், அமெரிக்காவில் வைரலான வீடியோ தான் தற்போது எல்லா இடத்திலும் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில், அமெரிக்காவில் ஒருவர் மெட்ரோல் ரயில் ஒன்றில் ரயில் பெட்டிக்குள் குளித்த வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. இந்த வீடியோ எப்போதே எடுக்கப்பட்டதாகவும் தற்போது வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது.