
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்ப தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 19, 2022 அன்று தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரிய மசோதாவை அனைவரும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 8 ஆம் தேதி திருப்பி அனுப்பிவிட்டார். அதற்கு அவர் கொடுத்த விளக்கமானது "ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்கும் சட்டத்தை இயக்க தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை" என்று கூறியுள்ளார்.
எனவே, நேற்று நடந்த தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய முடிவுகளை கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்கும் சட்ட மசோதாவை மீண்டும் இந்த சட்டசபையில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்று ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இதுவரை தமிழகத்தில் 41 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளனர். இதனால் மிகுந்த வேதனையடைந்ததாகவும் இனிமே தமிழகத்தில் இதனால் மக்கள் யாரும் உயிரிழக்க கூடாது என்று தெரிவித்தார்.