முதலைமைச்சர் வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்.! | New Notifications for Women Constables

By Gowthami Subramani Updated on :
முதலைமைச்சர் வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்.! | New Notifications for Women ConstablesRepresentative Image.

பெண் காவலர்களுக்கு உதவும் வகையில், நவரத்ன என்ற பெயரில் 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதனைப் பற்றி இதில் காண்போம்.

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 8.5 கோடி ரூபாய் செலவில் பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வுக்காக "அவள்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், இதில் ஆண்கள், பெண்கள் மீதான் பார்வையை மாற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இது பொன் விழா அல்ல பெண் விழா என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்களுக்கு நவரத்ன என்ற பெயரில் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முதலைமைச்சர் வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்.! | New Notifications for Women ConstablesRepresentative Image

நவரத்தின அறிவிப்புகள்

✤ பெண் காவலர்களுக்கு, காவல் கோப்பை என்ற விருதை கலைஞர் பெயரில் வழங்கப்படும்.

✤ காவல்துறையில் பெண்கள் என்னும் தேசிய மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும்.

✤ காவல் குழந்தைகள் காப்பகம் மேம்படுத்தப்படும்.

✤ சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கக் கூடிய விடுதி விரைவில் அமைக்கப்படும்.

✤ ரோல்கால் எனப்படும் காவல் அணி வகுப்பு காலை 7 மணிக்கு நடைபெற்று வந்தது. இனி இந்த அணி வகுப்பு காலை 8 மணிக்கு மாற்றப்படும்.

✤ பெண்களுக்கு துப்பாக்கிசூடும் போட்டி தனித்தனியே நடத்தப்பட்டு விருது, பரிசுகள் வழங்கப்படும்.

✤ அனைத்து காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கென தனி ஓய்வறை அமைத்து தரப்படும்.

✤ பெண் காவலர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு பணியிட மாறுதல், விடுப்பு போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

✤ டிஜிபி அலுவலகத்தில் பணி வழிகாட்டும் ஆலோசனை குழு உருவாக்கப்படும் 

இந்த நவரத்ன அறிவிப்புகளை பெண் காவலர்களுக்காக முதல்வர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்பான செய்திகள்