
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ், எழுத்தாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கி வருகிறது. அதன் படி, இத்திட்டத்தின் கீழ், மாதம் ரூ.4 ஆயிரம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை ஆண்டுதோறும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் படி, இந்த ஆண்டு தமிழறிஞர்களுக்கான உதவித் தொகை வழங்குவது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
விண்ணப்பிக்க தேவையானவை
வருமான சான்று, ஆற்றிய தமிழ்ப்பணிகள் குறித்த ஆதாரங்கள், தமிழறிஞர்கள் இருவரிடம் தமிழ்ப்பணி ஆற்றுவது குறித்த தகுதிநிலைச் சான்று போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள் 58 வயது உடைய தமிழறிஞர்கள் ஆவர். அதன் படி, இந்த உதவித் தொகை பெறுவதற்கு ஜனவரி 01, 2022 அன்று 58 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். அதே சமயம் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த உதவித் தொகை பெற, தமிழறிஞர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
அதே சமயம், இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: www.tamilvalarchithurai.gov.in
உதவித்தொகை விவரங்கள்
இந்த திட்டத்தில் உதவித் தொகை பெற வேண்டிய தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அதன் படி, தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3500 வழங்கப்படுகிறது. இத்துடன் மருத்துவப் படியாக ரூ.500 வழங்கப்படுகிறது.