
தமிழ்நாடு அரசுப்பள்ளியில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் இதுவரை 221 ஆசிரியர்கள் பணியாற்றினர். சமீபத்தில் 194 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். மொத்தத்தில் 415 அந்த பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தொகுப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலையாசிரியர்களுக்கு ரூ.12,000/-மும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000/-மும் தொகுப்பூதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18,000/- தொகுப்பூதியம் தருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.