தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் நாளை இரவு டெல்லி பயணம் செய்கிறார். நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லி பயணம் செய்வதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் முர்மு அவர்களைச் சந்தித்து, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மு.க.ஸ்டாலின் பேசுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.